/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில், பஸ்களில் சீட் கிடைக்காமல் சென்னை செல்ல பயணிகள் தவிப்பு
/
ரயில், பஸ்களில் சீட் கிடைக்காமல் சென்னை செல்ல பயணிகள் தவிப்பு
ரயில், பஸ்களில் சீட் கிடைக்காமல் சென்னை செல்ல பயணிகள் தவிப்பு
ரயில், பஸ்களில் சீட் கிடைக்காமல் சென்னை செல்ல பயணிகள் தவிப்பு
ADDED : ஜன 20, 2025 05:18 AM
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் வேலைக்கு செல்வதற்காக பஸ்கள் மற்றும் ரயில்களில் இடம் கிடைக்காத காரணத்தினால் கார் மற்றும் வேன்களில் பயணம் செய்து வருகின்றனர்.
மானாமதுரை மற்றும் இளையான்குடி பகுதிகளில் உள்ளவர்கள் பலர் கோவை, திருப்பூர்,சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த வாரம் பொங்கல் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விடுமுறை முடிந்து மேற்கண்ட ஊர்களுக்காக கிளம்புவதற்காக மானாமதுரை, மதுரை உள்ளிட்ட ஊர்களில் உள்ள பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றால் பஸ்கள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதியதால் ஏராளமானோர் வாடகை கார்கள் மற்றும் வேன்களை பிடித்து சென்று வருகின்றனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது, நாங்கள் சென்னையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வேலை பார்த்து வருகிறோம்.
தற்போது பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாத சூழ்நிலையில் கடந்த 2 நாள்களாக சென்னை, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களுக்கு ரயில்களில் நிற்கக்கூட இடமில்லாத சூழ்நிலை இருப்பதினால் நாங்கள் 20க்கும் மேற்பட்டோர் மொத்தமாக சேர்ந்து வாடகைக்கு வேனை பிடித்து செல்ல உள்ளதாக கூறினர்.