/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தள்ளுமாடல் அரசு டவுன் பஸ் தள்ள முடியாமல் தவித்த பயணிகள்
/
தள்ளுமாடல் அரசு டவுன் பஸ் தள்ள முடியாமல் தவித்த பயணிகள்
தள்ளுமாடல் அரசு டவுன் பஸ் தள்ள முடியாமல் தவித்த பயணிகள்
தள்ளுமாடல் அரசு டவுன் பஸ் தள்ள முடியாமல் தவித்த பயணிகள்
ADDED : டிச 18, 2024 06:51 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் அடிக்கடி பழுதாகி நிற்கும் டவுன் பஸ்களால் தவிப்பதுடன், இறங்கி தள்ளினாலும் பஸ்கள் ஸ்டார்ட் ஆகாததால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு திருப்புவனம் கிளை பணிமனை மூலம் 44 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர மதுரை கிளை பணிமனை மூலமும் டவுன் பஸ்கள் திருப்புவனத்திற்கு இயக்கப்படுகின்றன. கிராமங்களில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு இந்த டவுன் பஸ்கள் சென்று வருகின்றன. டவுன் பஸ்களை நம்பியே கிராம மக்கள் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக டவுன் பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் பாதி வழியில் பயணிகளை பரிதவிக்க விடுகின்றன.
இரவு நேரத்தில் டீசல் இன்றி கிராமப்புறங்களுக்கு செல்லாதது, பஸ்களில் விளக்குகள் சரிவர எரியாதது உள்ளிட்ட பிரச்னைகளால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
பாதி வழியில் பஸ்கள் அடிக்கடி நின்று விடுவதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு நேற்று காலை 9:30 மணிக்கு திருப்புவனம் புதுார் வழியாக லாடனேந்தலுக்கு சென்ற டவுன் பஸ் மாரியம்மன் கோயில் அருகே பழுதாகி நின்றது.
பழுதாகி நின்ற பஸ்சை தள்ளுவதற்கு பஸ்சில் குறைந்த அளவு பயணிகள் இருந்த நிலையில் எதிரே வந்த சிட்டி பஸ்சை நிறுத்தி அதிலிருந்த டிரைவர், கண்டக்டர், பயணிகள் இறங்கி தள்ளிய பின் ஸ்டார்ட் ஆனது. எனவே டவுன் பஸ்களை போதிய பராமரிப்பு செய்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

