/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா
/
பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா
ADDED : ஏப் 13, 2025 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியில் பட்டத்தரசி அம்மன்கோயில் பங்குனித் திருவிழா நடந்தது.
இக்கோயிலில் பங்குனிதிருவிழா ஏப்.3ம் தேதி பூச்சொரிதல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. நேற்று ஏராளமானோர் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.