/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டயாலிசிஸ் சென்டருக்கு பேவர் பிளாக் ரோடு
/
டயாலிசிஸ் சென்டருக்கு பேவர் பிளாக் ரோடு
ADDED : அக் 23, 2025 11:28 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட டயாலிசிஸ் மைய கட்டடத்திற்கு செல்ல முறையான பாதை இல்லாததால் நோயாளிகள், ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.
இம்மருத்துவமனையில் ஜூலை 26 ல் புதிய டயாலிசிஸ் மையம் திறக்கப்பட்டது. அக்கட்டடத்திற்கு செல்ல ஒரு பக்கம் படிகளும், இன்னொரு பக்கம் சாய்தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நோயாளிகள் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்படும் போதும், ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு வரும்போதும் முறையான பாதை இல்லாததால் சக்கரங்கள் சகதியில் புதைந்து சிரமம் ஏற்படுகிறது. கட்டடம் அருகே ஆம்புலன்ஸ் வந்து செல்ல முடிவதில்லை. எனவே டயாலிசிஸ் கட்டடம் முன் பேவர் பிளாக் ரோடு அமைக்க வேண்டும்.

