/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இலைச்சுருட்டு பூச்சியால் கடலை விவசாயம் பாதிப்பு
/
இலைச்சுருட்டு பூச்சியால் கடலை விவசாயம் பாதிப்பு
ADDED : ஜன 28, 2025 05:30 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இலைச் சுருட்டு பூச்சிகளால் கடலை பயிர் சேதம் அடைவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இத்தாலுகாவில் பிரான்மலை, கிருங்காகோட்டை, ஒடுவன்பட்டி, எஸ்.புதுார் பகுதியில் விவசாயிகள் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் கடலை சாகுபடி செய்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு விதைக்கப்பட்ட நிலையில் தற்போது பயிர்கள் அனைத்தும் பூக்கும் தருவாயில் உள்ளது.
பல இடங்களில் செடிகளில் இலைச் சுருட்டல் பூச்சிகளின் தாக்கம் அதிகம் உள்ளது.
இதனால் செடிகள் பாதித்து விளைச்சல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் செடிகளுக்கு தற்காலிகமாக பூச்சி மருந்துகளை வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
குமரன், விவசாயி கிருங்காக்கோட்டை: இரண்டு மாதங்களுக்கு முன்பு கடலை விதைத்தேன் அப்போது பெய்த மழையால் பயிர் நன்றாக வளர்ந்திருந்தது.
ஆனால் அடுத்த பெய்த மழை பனி மற்றும் சீதோஷ்ண மாற்றம் காரணமாக செடியில் பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் விளைச்சல் குறைந்து நஷ்டம் ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக பூச்சி மருந்துகளை வாங்கி பயன்படுத்தி வருகிறேன், என்றார்.