ADDED : மே 24, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி வட்ட ஓய்வூதியர்கள் சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் காரைக்குடியில் நடந்தது.
தலைவர் அங்கமுத்து தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்லத்துரை வரவேற்றார்.
துணைத் தலைவர் பவாலறிவன், நிலவழகன் மாநில துணைத்தலைவர் திருஞானசம்பந்தம், செயலாளர் மோகன்தாஸ் பேசினர். கூட்டத்தில் தி.மு.க., வின் தேர்தல் அறிக்கை படி 70 வயதுக்கு மேல் உள்ள ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பண்டிகை முன்பணம் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சோலையன் நன்றி கூறினார்.