நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின விழா நடந்தது.
வட்டக்கிளை தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார். வட்ட செயலாளர் முத்து வரவேற்றார். நிர்வாகிகள் பாண்டி, வேலவன், பாலுச்சாமி, மாவட்ட தணிக்கையாளர் வாழவந்தான், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துமாடன், அரசு பணியாளர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், மாவட்ட தலைவர் திரவியம், செயலாளர் சங்கரசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினர். முன்னாள் மாநில செயலாளர் ராபர்ட் நிறைவுரை ஆற்றினார். வட்ட பொருளாளர் கோபிநாத் நன்றி கூறினார்.