/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தனியார் பெயருக்கு அய்யனார் கோயில் நிலம் கலெக்டரிடம் மக்கள் புகார்
/
தனியார் பெயருக்கு அய்யனார் கோயில் நிலம் கலெக்டரிடம் மக்கள் புகார்
தனியார் பெயருக்கு அய்யனார் கோயில் நிலம் கலெக்டரிடம் மக்கள் புகார்
தனியார் பெயருக்கு அய்யனார் கோயில் நிலம் கலெக்டரிடம் மக்கள் புகார்
ADDED : ஆக 26, 2025 03:45 AM

சிவகங்கை: தேவகோட்டை அருகே தனியார் பெயரில் பட்டா போட்டுள்ள, அய்யனார் கோயில் நிலத்தை மீட்டுத்தர கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் ரேஷன், ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்.
தேவகோட்டை தாலுகா, சருகணி அருகே பொன்னலிக்கோட்டையில் நீக்காருடைய அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் பெயரில் 1.5 ஏக்கர் நிலம் வரை இருந்தது. 1984ம் ஆண்டில் இருந்தே நில ஆவணங்களில் கோயில் பெயரில் தான் நிலங்கள் இருந்தன.
இந்நிலையில் ஒருவர் அய்யனார் கோயில் பெயரில் இருந்த 1.5 ஏக்கர் நிலத்தை, தன் பெயருக்கு மாற்றியுள்ளார். பின்னர் வருவாய், பத்திரபதிவு துறையினர் துணையுடன் 2024 மே மாதம் அவரது மனைவி பெயருக்கு பவர் எழுதி கொடுத்து, பட்டா பதிவு செய்துள்ளார்.
எனவே கோயில் பெயரில் இருந்த நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி தேவகோட்டை தாசில்தார், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் துறையினரிடம் புகார் அளித்தனர்.
ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, தனியார் பெயரில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டும், மீண்டும் கோயில் பெயரிலேயே பட்டா தயாரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று அக்கிராமத்தினர் கலெக்டர் பொற்கொடியிடம் புகார் அளித்தனர்.
மேலும், இதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் ரேஷன், ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப் படைக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னலிக்கோட்டை மனோகரன் கூறியதாவது:
கலெக்டரிடம் நேரடியாக மனுவை வழங்கினோம். அக்.,10ம் தேதிக்குள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையடுத்து அக் கிராமத்தை சேர்ந்த 250 குடும்பங்களை சேர்ந்தவர்களும் வாக்காளர், ரேஷன், ஆதார் கார்டுகளை ஒப் படைக்கும் போராட்டத்தை வாபஸ் பெற்று செல் கிறோம்.
இதற்கு பின்னரும் மாவட்ட நிர்வாகம் கோயில் நிலத்தை மீட்டு தராவிடில், ஒட்டுமொத்த கிராம மக்களும் கலெக்டரிடம் ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை களை ஒப்படைத்து விடுவோம், என்றார்.