/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காட்டு உடைகுளத்தில் ஆக்கிரமிப்பு மனைகளாக மாற்ற மக்கள் எதிர்ப்பு
/
காட்டு உடைகுளத்தில் ஆக்கிரமிப்பு மனைகளாக மாற்ற மக்கள் எதிர்ப்பு
காட்டு உடைகுளத்தில் ஆக்கிரமிப்பு மனைகளாக மாற்ற மக்கள் எதிர்ப்பு
காட்டு உடைகுளத்தில் ஆக்கிரமிப்பு மனைகளாக மாற்ற மக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 23, 2025 11:44 PM
மானாமதுரை: மானாமதுரை காட்டு உடைகுளத்தில் அரசு இடத்தை சிலர் ஆக்கிரமித்து மனைகளாக மாற்றுவதற்கு முயற்சி செய்கின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை தாலுகா அலுவலகத்திற்கு எதிரே காட்டு உடைகுளம் பகுதியில் கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வழி பாதையாக உள்ள இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைகளாக மாற்ற நடவடிக்கை எடுப்பதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் கூறியதாவது: மேற்கண்ட இடத்தை சிப்காட் நிர்வாகத்திற்கு தமிழக அரசு 1989ம் ஆண்டு ஒப்படைத்துள்ளது.உடைகுளம் பகுதியை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக அந்த இடத்தை வீட்டு மனைகளாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை அறிந்து காவல் துறையினருடன் சென்று பணியை தடுத்து நிறுத்தி உள்ளோம். இது குறித்து சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.