/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வணிக வளாகம் வேண்டாம் பஸ் ஸ்டாண்ட் போதும் மக்கள் எதிர்ப்பு
/
வணிக வளாகம் வேண்டாம் பஸ் ஸ்டாண்ட் போதும் மக்கள் எதிர்ப்பு
வணிக வளாகம் வேண்டாம் பஸ் ஸ்டாண்ட் போதும் மக்கள் எதிர்ப்பு
வணிக வளாகம் வேண்டாம் பஸ் ஸ்டாண்ட் போதும் மக்கள் எதிர்ப்பு
ADDED : நவ 27, 2024 08:05 AM
சிவகங்கை : இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் அமைக்கப்பட பஸ் ஸ்டாண்டில் வணிக வளாகம் வேண்டாம் பஸ் ஸ்டாண்ட் மட்டும் போதும் என அப்பகுதி மக்கள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.
சாலைக்கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட் போதிய இடவசதியின்றி செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் ஸ்டாண்டில் இரண்டு பஸ்கள் மட்டுமே நிறுத்த முடியும். அதற்கு மேல் நிறுத்த முடியாது.
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த பகுதி மக்கள் சாலைக்கிராமத்திற்கு புதிதாக பஸ் ஸ்டாண்ட் கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அரசு அதற்கு ஒப்புதல் தெரிவித்து தற்போது இயங்கி வரும் அதே இடத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் வணிக வளாகத்துடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கு நிதி ஒதுக்கி அதற்கான பணியும் நடந்து வருகிறது.
தற்போது உள்ள பஸ் ஸ்டாண்டில் உள்ள பழைய கட்டடங்களை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு பஸ் நிற்பதற்கான கட்டுமானங்கள் பணி மட்டுமே செய்ய வேண்டும் வணிக வளாகம் கட்டடம் கட்ட வேண்டாம். வணிக வளாகம் கட்டடம் கட்டினால் பஸ் நிறுத்த இடம் இருக்காது என்று எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கிராம மக்கள் கூறுகையில், தற்போது உள்ள பஸ் ஸ்டாண்ட் 20 சென்ட். இதில் வணிக வளாகத்துடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட போவதாக கூறுகிறார்கள்.
இதில் 9 சென்டில் வணிக வளாகம் கட்டடம் வந்தால் மீதம் உள்ள இடத்தில் போதிய பஸ்கள் நிறுத்த முடியாது.
மீண்டும் பழைய பிரச்னை வரும். ஆகையால் பஸ் நிறுத்துவதற்கான கட்டுமான பணி நடந்தால் மட்டும் போதும் வணிக வளாகம் கட்டடம் வேண்டாம் என்றனர்.