/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர் இருட்டில் தவிக்கும் மக்கள்
/
வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர் இருட்டில் தவிக்கும் மக்கள்
வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர் இருட்டில் தவிக்கும் மக்கள்
வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர் இருட்டில் தவிக்கும் மக்கள்
ADDED : ஏப் 16, 2025 08:41 AM
திருப்புவனம், : திருப்புவனத்தில் ஒரே நேரத்தில் இரண்டு டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
திருப்புவனம் புதுாரில் பர்மா காலனி பகுதியில் 500 க்கும் மேற்பட்ட வீடுகள், தாசில்தார் குடியிருப்பு, மாணவிகள் விடுதி, வேளாண் அலுவலகம், கால்நடை மருத்துவமனை உள்ளன. இப்பகுதி மின்சார தேவைக்காக 100 கி. வாட் திறனுள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டிருந்தது.
குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் பிரிஜ், மோட்டார்கள் இயங்காததால் கூடுதலாக 63 கி. வாட் திறனுள்ள டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டது. புதுப்புது குடியிருப்புகள் உருவாகி வரும் நிலையில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக கூடுதல் டிரான்ஸ்பார்மர் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு ஒரே நேரத்தில் இரண்டு டிரான்ஸ்பார்மர்களும் வெடித்து சிதறியதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. மின் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு நாட்டரசன்கோட்டையில் இருந்து டிரான்ஸ்பார்மர் கொண்டு வந்து பொருத்த வேண்டும். நேற்று (15ம் தேதி) மாலைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் மாலை 5:00 மணி வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இதனால் குடிநீர் மோட்டார்கள் இயக்க முடியாமலும் , வெயில் காரணமாக புழுக்கத்திலும் தவித்தனர். திருப்புவனத்தில் 15 ஆயிரம் இணைப்புகள் உள்ள நிலையில் மின் சாதன பொருட்கள் இருப்பு வைத்திருப்பதில்லை. சின்ன சின்ன உபகரணங்களுக்கு கூட நாள் கணக்கில் காத்து கிடக்க வேண்டியுள்ளது. எனவே அத்யாவசிய தேவையான மின்சாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.