ADDED : நவ 19, 2024 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மதகுபட்டி அருகே கீழப்பூங்குடி சேதுராமன் மகன் பாலமுருகன் 43. இவர் 2 ஆண்டாக மலேசியாவில் பணி புரிந்து வருகிறார். நவ., 4 ம் தேதி குழந்தைகள், தாய் ராமுவிடம் பேசியுள்ளார்.
அதற்கு பின் அலைபேசியில் பேசவில்லை. தொடர்பு கொண்டாலும், 'சுவிட்ச் ஆப்' என வருகிறது. இவர் பணிபுரியும் கம்பெனியில் விசாரித்தால், அவர்களும் காணவில்லை என்கின்றனர். மலேசியாவில் காணாமல் போன தன் மகனை மீட்டு தரக்கோரி, நேற்று சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம், அவரது தாய் ராமு மனு அளித்தார்.