/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆழிமதுரை வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்ற மறியல்
/
ஆழிமதுரை வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்ற மறியல்
ஆழிமதுரை வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்ற மறியல்
ஆழிமதுரை வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்ற மறியல்
ADDED : நவ 13, 2024 09:27 PM
இளையான்குடி; ஆழிமதுரை கிராமத்திற்கு பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து வைகை வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது.
இக்கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சர்வே செய்து கொடுக்க வேண்டும், கால்வாயில் தலை மதகு பழுதடைந்துள்ளதை ஆழப்படுத்தியும்,அகலப்படுத்தியும் தர வேண்டும், அதிகரை விலக்கில் உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை கிராம மக்கள் நீண்ட காலமாக விடுத்து வருகின்றனர்.
நேற்று காலை 10:00 மணிக்கு ஆழிமதுரை கிராம மக்கள் விலக்கு ரோடு அருகே சாலை மறியல் போராட்டம் செய்ய வந்தனர்.
இளையான்குடி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதான கூட்டம் நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.