/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறை கைதி பரிசோதனைக்கு டாக்டரின்றி போலீசார் புலம்பல்: மானாமதுரை, இளையான்குடியில் தொடரும் அவலம்
/
சிறை கைதி பரிசோதனைக்கு டாக்டரின்றி போலீசார் புலம்பல்: மானாமதுரை, இளையான்குடியில் தொடரும் அவலம்
சிறை கைதி பரிசோதனைக்கு டாக்டரின்றி போலீசார் புலம்பல்: மானாமதுரை, இளையான்குடியில் தொடரும் அவலம்
சிறை கைதி பரிசோதனைக்கு டாக்டரின்றி போலீசார் புலம்பல்: மானாமதுரை, இளையான்குடியில் தொடரும் அவலம்
ADDED : ஜன 14, 2025 05:21 AM
இளையான்குடி,மானாமதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், 30க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இப்பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் காயம் அடைபவர்களுக்கும் முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இளையான்குடி, மானாமதுரை மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களிலும் அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இளையான்குடி, மானாமதுரை அரசு மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 2பேர் மட்டுமே பணியாற்றி வருவதினால் மாலை 5:00 மணிக்கு மேல் டாக்டர்கள் மருத்துவமனைகளில் இல்லாத காரணத்தினால் இப்பகுதிகளில் கொலை, கொள்ளை,திருட்டு,வழிப்பறி மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை ரிமாண்ட் செய்வதற்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றால் டாக்டர்கள் இல்லாமல் செவிலியர்கள் மட்டும் பணியில் இருப்பதினால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்துவதாக போலீசார் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார்கள் சிலர் கூறியதாவது, பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை மாலை 5:00 மணிக்கு மேல் மருத்துவ பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது டாக்டர்களின்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறுகின்றனர். ஏற்கனவே போதுமான வாகன வசதி இல்லாத நிலையில் டூவீலர்களில் அழைத்து செல்லும் போது பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுகிறது.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே இளையான்குடி,மானாமதுரை அரசு மருத்துவமனைகளில் உடனடியாக டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.