/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ் டிரைவர் மீது தாக்கு : போலீசார் விசாரணை
/
பஸ் டிரைவர் மீது தாக்கு : போலீசார் விசாரணை
ADDED : நவ 05, 2025 12:26 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று காலை அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த டெய்லர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலியாந்துாரில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு நேற்று காலை 9:00 மணிக்கு அரசு டவுன் பஸ் கிளம்பியது.
பஸ்சை தற்காலிக ஊழியர் அஜித்குமார் 35, இயக்கியுள்ளார். கண்டக்டராக செந்தில்குமார் பணியாற்றியுள்ளார். திருப்புவனம் மணி மந்திர விநாயகர் கோயில் அருகே குறுகிய வளைவில் திரும்பும் போது சைக்கிளில் சென்ற திருப்புவனம் புதுாரைச் சேர்ந்த டெய்லர் ஆதிகணேசன் என்பவர் மீது உரசியது. ஆத்திரமடைந்த ஆதிகணேசன் அரசு பஸ் டிரைவர் அஜித்குமாரை திட்டியதுடன் பஸ்சில் ஏறி செருப்பால் அடித்து விட்டு கீழே இறங்கி விட்டார்.
பதிலுக்கு பஸ் டிரைவர் அஜித்குமாரும் ஆதிகணேசன் மீது செருப்பை வீசியுள்ளார். கண்டக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் இருவரையும் சமாதானம் செய்தனர்.
பொதுமக்கள் முன்னிலையில் செருப்பால் அடித்ததால் வேதனையடைந்த டிரைவர் அஜித்குமார் பஸ்சை பணிமனைக்கு கொண்டு சென்று நிறுத்தி விட்டு திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் டெய்லர் ஆதிகணேசன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

