ADDED : ஜூலை 12, 2025 04:52 AM
டூவீலர்கள் மோதி விபத்து லாரி டிரைவர் பலி
சிவகங்கை: சிவகங்கை அருகே காமராஜர் காலனி டிப்பர் லாரி டிரைவர் பாண்டியராஜன் 51. இவர் ஜூலை 9 ம் தேதி காலை 9:30 மணிக்கு டூவீலரில் சக்கந்தி மில்கேட் அருகே ரோட்டை கடந்த போது, சிவகங்கை மஜீத் ரோட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன் 41, ஓட்டி வந்த டூவீலர் மோதியதில், டிரைவர் பாண்டியராஜன் காயமுற்றார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி ஜூலை 10ம் தேதி அதிகாலை 12:15 மணிக்கு உயிரிழந்தார். சிவகங்கை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் விசாரிக்கிறார்.
மூதாட்டியிடம் வழிப்பறி
பழையனுார்: திருப்புவனம் அருகே சங்கங்குளம் மேலக்காட்டில் உள்ள மின்மோட்டார் அறையில் முத்தையா மனைவி மீனாட்சி 80, இருந்தார். ஜூலை 10 ம் தேதி மதியம் 1:00 மணிக்கு டூவீலரில் வந்த நபர் மூதாட்டியிடம் தண்ணீர் கேட்பது போல் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது யாரும் இல்லாததால், அவரது காதில் அணிந்திருந்த 4 பவுன் நகையை வழிப்பறி செய்து தப்பினார். பழையனுார் எஸ்.ஐ., மாரிமுத்து விசாரிக்கிறார்.
கல்லில் அடிபட்டு வாலிபர் பலி
சாக்கோட்டை: பீகார் மாநிலம் கான்சா கிராமத்தை சேர்ந்த லாசர் சாய் தேவ் மகன் அர்பின்குமார் 18, மற்றும் அவரது நண்பர்கள் பரத்குமார், சனேஷ் ஆகியோர் காரைக்குடி அருகே புதுவயலில் உள்ள அரிசி ஆலையில் வேலை செய்துள்ளனர். ஜூலை 9ம் தேதி இரவு பணியை முடித்து, மூவரும் மது அருந்தியுள்ளனர். இரவு 10:00 மணிக்கு மேல் ஆகியும் மூவரும் வரவில்லை. உறவினர்கள் தேடி பார்த்த போது மூவரும் மயங்கி விழுந்துள்ளனர். அப்போது அர்பின்குமார் மயங்கி கருங்கல்லில் தலை அடிபட்ட நிலையில் இறந்துள்ளார். சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் கலாராணி விசாரிக்கிறார்.