/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போலீஸ் ரோந்து பணியில் தொய்வு தொடரும் திருட்டு சம்பவங்கள்
/
போலீஸ் ரோந்து பணியில் தொய்வு தொடரும் திருட்டு சம்பவங்கள்
போலீஸ் ரோந்து பணியில் தொய்வு தொடரும் திருட்டு சம்பவங்கள்
போலீஸ் ரோந்து பணியில் தொய்வு தொடரும் திருட்டு சம்பவங்கள்
ADDED : நவ 21, 2025 04:46 AM
மானாமதுரை: மானாமதுரையில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் 5க்கும் மேற்பட்ட திருட்டு சம் பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளதால் போலீசார் தினசரி ரோந்து செல்ல வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மானாமதுரை தயாபுரம் பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 40 பவுன் தங்க நகை மற்றும் பணம், வெள்ளி பொருட்கள் திருடு போனது.
இதனை தொடர்ந்து அதே பகுதியில் சேதுபதி என்பவரது வீட்டிலும் திருட்டு நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன் தயாபுரம் ரயில்வே கேட் அருகே உள்ள வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் திருடு போனது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அருள்ஜோதி என்பவரது வீட்டில் முன் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரும் திருடு போனது.
மானாமதுரை சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் ஏராளமான திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதால் போலீசார் இரவு நேரங்களில் அனைத்து பகுதிகளிலும் ரோந்து செல்ல வேண்டுமென்றும், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

