ADDED : நவ 14, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி: பூவந்தி அருகே போலீஸ் கார் - - டூவீலர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டுனரை கைது செய்தனர்.
நவ.11ம் தேதி பூவந்தி அருகே அனஞ்சியூர் விலக்கு என்ற இடத்தில் போலீஸ் காரும், - டூவீலரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிட்டம்பட்டியைச் சேர்ந்த பிரசாத் 25, சத்யா 20, தஷ்வந்த் 4, ஆகிய மூவர் உயிரிழந்தனர், சோனை ஈஸ்வரி என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சோனைஈஸ்வரி புகாரின் பேரில் போலீஸ் கார் டிரைவர் பாலமுருகன் மீது பூவந்தி போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

