sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா

/

பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா

பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா

பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா


ADDED : ஜன 13, 2025 06:47 AM

Google News

ADDED : ஜன 13, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : ராஜராஜன் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா நடந்தது. முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா தலைமை வகித்தார். தாசில்தார் ராஜா, முதல்வர்கள் சிவக்குமார், அங்கையற்கண்ணி, மகாலிங்க சுரேஷ், பள்ளி முதல்வர் வெங்கட்டரமணன் கலந்து கொண்டனர்.

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் துணை தலைவர் அருண் துவக்கி வைத்தார். முதல்வர் உஷா குமாரி, துணை முதல்வர் பிரேம சித்ரா கலந்து கொண்டனர்.

காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளி தலைவர் சேதுராமன், முதன்மை முதல்வர் அஜய் யுக்தேஷ், முதல்வர் பரமேஸ்வரி கலந்து கொண்டனர்.

காரைக்குடி ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. ஜே.சி.எல். இந்தியா மண்டல தலைவர் ரமேஷ், பள்ளி செயலர் கார்த்தி, முதன்மை முதல்வர் நாராயணன், ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் ராஜ்குமார் பங்கேற்றனர்.

கோட்டையூர் திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளையில் பொங்கல் விழா நடந்தது. தலைவர் விஸ்வநாத கோபாலன் துவக்கி வைத்தார்.

இயக்குனர் ஆதினம், உறுப்பினர்கள் தெய்வானை, செந்தமிழ் செல்வன் கல்லுாரி முதல்வர் சுதா, பொறுப்பாளர் உஷா கல்யாணி பங்கேற்றனர்.

அமராவதிபுதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது. செயலர் சாரதேஸ்வரி பிரியா அம்பா, ராமகிருஷ்ண பிரியா தலைமை ஏற்றனர். முதல்வர் சிவசங்கரி ரம்யா இயக்குனர் மீனலோச்சனி முன்னிலை வகித்தனர்.

பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரியில் பொங்கல் தின விழா நடந்தது.

கல்லுாரி செயலாளர் சிவராம், முதல்வர் விசுமதி தலைமை வகித்தனர். மூன்றாம் ஆண்டு மாணவிகள் பராம்பரிய முறையில் பொங்கல் வைத்தனர். கலை நிகழ்ச்சி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்கினர்.

சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது. முதல்வர் இந்திரா தலைமை வகித்தார். மாணவிகள், பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு போட்டிகள், கலை நிகழ்ச்சி நடத்தி பரிசு வழங்கினர்.

21ஆம் நுாற்றாண்டு சர்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், அறங்காவலர் ராணி சத்தியமூர்த்தி, முதன்மை முதல்வர் விவேகானந்தன், முதல்வர் சங்கீதா, துணை முதல்வர்கள் அருணா தேவி, கனி, தலைமையாசிரியை சாரதா பங்கேற்றனர்.

திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் விவேகானந்தா பி.எட்., கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது. முதல்வர் கே.சசிகுமார் வரவேற்றார். தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். விவேகானந்தா கல்வி அறக்கட்டளை இயக்குநர் ஏ.உருமநாதன் முன்னிலை வகித்தார்.

திருப்புத்துார் பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் பள்ளியில், தாளாளர் பாபா அமீர் பாதுஷா தலைமை வகித்தார். முதல்வர் வரதராஜன் வரவேற்றார். மாணவ,மாணவியர், ஆசிரியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

திருப்புத்துார் இந்திரா காந்தி மெட்ரிக்., பள்ளியில் தாளாளர் ஏகாம்பாள் கணேசன் தலைமை வகித்தார். முதல்வர் ராமு முன்னிலை வகித்தார். ஆசிரியர் பழனியப்பன் வரவேற்றார். மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

தேவகோட்டை ஜமீன்தார் உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. மாணவர்களுக்கு கட்டுரை, ரங்கோலி போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு கந்த சஷ்டி விழா கழக தலைவர் வீரப்பன் பரிசுகள் வழங்கினார்.

அலமேலு முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். பள்ளி வளர்ச்சி குழு தலைவர் மலையப்பன் பங்கேற்றனர்.

ராமகிருஷ்ண நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளி நிர்வாகி சோமநாராயணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி உட்பட ஆசிரியர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

சிவகங்கை சாய்பாலமந்திர், பாலமுருகன் நர்சரி தொடக்க பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. லயன்ஸ் தலைவர் விஸ்வநாதன், முன்னாள் லயன்ஸ் தலைவர் தங்கமணி பங்கேற்றனர்.

பள்ளி நிர்வாகி குமார், தலைமை ஆசிரியை ஆர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us