/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேளாண் திட்டத்திற்கு மீண்டும் மின் இணைப்பு
/
வேளாண் திட்டத்திற்கு மீண்டும் மின் இணைப்பு
ADDED : ஜூன் 28, 2025 11:41 PM
தேவகோட்டை: தேவகோட்டை அருகே மானம்பு வயல் கிராமத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 16 விவசாயிகளின் 13.19 ஏக்கர் நிலத்தை சேர்த்தனர்.
இந்த திட்டத்திற்காக வேளாண் துறை ரூ. 12 லட்சத்து 52 ஆயிரத்து 450 செலவழித்தனர். மாங்கன்று, மகா கனி, செம்மரம், தேக்கு உட்பட கன்றுகள் வழங்கினர். 16 பேரும் கன்றுகளை நட்டு, ரூ.10 லட்சம் செலவழித்து கன்றுகளுக்கு வேலி அமைத்தனர்.
இத்திட்டத்திற்கென அமைத்த ஆழ்துளை கிணறு மூலம் சொட்டு நீர் பாசனமாக கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சினர். கன்று வளர தொடங்கிய நிலையிலேயே வேறு எங்கோ மின் பழுது காரணமாக இங்குஉள்ள டிரான்ஸ்பார்மரை கழற்றி சென்றனர். எட்டு மாதமாகியும் மீண்டும் வைக்கவில்லை. மரக்கன்றுகள் பட்டு போக தொடங்கின.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிகாரிகளிடம் கூறியும் கண்டு கொள்ளவில்லை. தினமலர் நாளிதழ் ஜூன் 24ல் படத்துடன் செய்தி வெளியிட்டது. மின்வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை பொருத்தி மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து மின்வாரிய பணியாளர்கள் நேற்று முன்தினம் மின்மாற்றியை பொருத்தி இணைப்பு கொடுத்தனர்.