/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் 2வது நாளாக மழை அறுந்து விழுந்த மின் கம்பி
/
திருப்புவனத்தில் 2வது நாளாக மழை அறுந்து விழுந்த மின் கம்பி
திருப்புவனத்தில் 2வது நாளாக மழை அறுந்து விழுந்த மின் கம்பி
திருப்புவனத்தில் 2வது நாளாக மழை அறுந்து விழுந்த மின் கம்பி
ADDED : ஆக 04, 2025 04:16 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று முன்தினம் 2வது நாளாக பெய்த மழை காரணமாக மரம் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்தது.
திருப்புவனத்தில் கடந்த இரு நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. 1ம் தேதி 79.2 மி.மீ., 2ம் தேதி 22.2 மி.மீ., மழை அளவு பதிவாகியது. மாலை நேர மழையால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவினாலும் பகலில் வெயிலின் தாக்கம் அப்படியே உள்ளது.
நேற்று முன் தினம் மாலை திருப்புவனம் புதூர் செட்டிய தெருவில் மழை காரணமாக மரம் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் அந்த தெருவில் மட்டும் துண்டிக்கப்பட்டது.
நேற்று பகலில் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளை சரி செய்து மின்சாரத்தை வழங்கினர்.