/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொடக்க கூட்டுறவு கடன் சங்க கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு காலமுறை சம்பளம் அமைச்சரின் வீட்டிற்கே சென்று மனு

ADDED : ஆக 12, 2025 06:49 AM
சிவகங்கை : தொடக்க கூட்டுறவு கடன் சங்க இ--சேவை மைய கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வலியுறுத்தி, அமைச்சர் பெரியகருப்பனிடம் மனு அளித்தனர்.
தமிழக அளவில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களிலும் 2014-15ம் ஆண்டுகளில் இ--சேவை மையங்கள் திறக்கப்பட்டன. இந்த மையங்களில் பணிபுரிய முதுகலை பட்டம், கூட்டுறவு மேலாண்மை பட்டயம் படித்தவர்கள் தற்காலிக அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களாக நியமிக்கப்பட்டனர்.
மாநில அளவில் உள்ள 4800 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் 4000க் கும் மேற்பட்ட சங்கங்களில் தற்காலிக அடிப் படையில் மாதம் ரூ.7000 சம்பளத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் களாக பணிபுரி கின்றனர்.
இவர்கள், இ--சேவை மையங்களுக்கு நிய மிக்கப்பட்டாலும், அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களிலும் வரவு செலவு கணக்கு பார்த்தல், பயிர், நகை அடமான கடன் ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட கடன் சங்க பணிகளையும் சேர்த்து பார்த்துள்ளனர்.
10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், இது வரை கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை கூட் டுறவுத்துறை நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய வில்லை.
எனவே தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்து இ--சேவை மைய கம்ப்யூட்டர் ஆப்ப ரேட்டர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், 110 கம்ப்யூட்டர் ஆப்ப ரேட்டர்கள், திருப்புத்துாரில் உள்ள அமைச்சர் பெரியகருப்பன் வீட்டிற்கு சென்றவர்கள், அவரிடம் காலமுறை சம்பளம் கோரி மனு அளித்தனர்.