ADDED : செப் 18, 2025 05:51 AM
சாலைக்கிராமம் : சாலைக்கிராமத்தில் தெற்கு ஒன்றிய பா.ஜ., மற்றும் வாசன் கண் மருத்துவமனை சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாமை மாவட்ட செயலாளர் ராஜபிரதீப் துவக்கி வைத்தார். தெற்கு ஒன்றிய தலைவர் செல்லக்குட்டி பாலமுருகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய தலைவர் சிலம்பரசன், நிர்வாகிகள் மணிமேகலன், பிரபுதேவா பங்கேற்றனர்.
*சிவகங்கையில் மாவட்ட துணைத் தலைவர் சுகனேஸ்வரி தலைமையில் தாய் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நகர் தலைவர் உதயா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கொல்லங்குடியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் கந்தசாமி தலைமை வகித்து துாய்மைப்பணியாளர்களுக்கு வேட்டி, சேலை, 10 கிலோ அரிசி வழங்கினார். மாவட்ட பொதுச்செயலர் சுப்புக்காளை, வெண்மணி, கவுதம்கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.