/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூலை 24, 2025 11:59 PM
சிவகங்கை; சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
இதில், 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் கம்பெனிகள் 5 ஆயிரம் காலிபணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
கல்வி தகுதிக்கு ஏற்ப தனியார் துறைகளில் குறைந்தது மாதம் ரூ.10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்கப்படும்.
அயல் நாடுகளில் வேலை பெறவும் வழிகாட்டுதல் வழங்கப்படும். இம்முகாமில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, சுய தொழில் துவங்குவதற்கான தமிழக அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.
இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், பொறியியல் முடித்தோர் பங்கேற்கலாம். வயது வரம்பு 18 முதல் 40 க்குள் இருத்தல் வேண்டும். முகாமில் பங்கேற்க விரும்புவோர் ''www.tnprivatejobs.tn.gov.in'' என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.