ADDED : அக் 08, 2025 12:21 AM

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை தமிழ்ப் பண்பாட்டு மையம் நுண்கலைத் துறை வீறுகவியரசர் முடியரசனார் அவைக்களம் சார்பில் நுால் வெளியீட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
பேராசிரியை செந்தமிழ் பாவை வரவேற்றார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி தலைமையேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., கவிதைப்பித்தன் தொடக்க உரையாற்றினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், வீறுகவி பாடிய வீரகவி என்ற நுாலை வெளியிட ஏ.சி.என். கல்வி தொண்டு அறக்கட்டளை நிறுவனர் சந்திரபாபு, ஆசிரியர் ராமன், டாக்டர் அமலன் பெற்றுக்கொண்டார்.
முன்னாள் அமைச்சர் தென்னவன், மாங்குடி எம்.எல்.ஏ., வீறுகவியரசர் முடியரசனார் அவைக்கள செயலாளர் தமிழ் முடியரசன் இணைச்செயலாளர் வனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.