ADDED : டிச 31, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., சக்திவேல், போலீஸ்காரர் சூர்யகுமார் உள்ளிட்ட போலீசார், நாட்டரசன்கோட்டையில் குற்றப்பதிவேடு குற்றவாளியான கணேசன் மகன் ஈஸ்வரன், 38, என்பவரை கண்காணிக்க சென்றனர்.
அப்போது, எஸ்.ஐ., மற்றும் உடன் இருந்த போலீசாரை ஈஸ்வரன், கையில் வைத்திருந்த கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். அவரை எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் பிடித்தனர். ஈஸ்வரனை, போலீசார், நேற்று கைது செய்தனர்.

