/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுவாச்சி ரோடு பிரச்னை அதிகாரியை கண்டித்து போராட்டம்
/
சிறுவாச்சி ரோடு பிரச்னை அதிகாரியை கண்டித்து போராட்டம்
சிறுவாச்சி ரோடு பிரச்னை அதிகாரியை கண்டித்து போராட்டம்
சிறுவாச்சி ரோடு பிரச்னை அதிகாரியை கண்டித்து போராட்டம்
ADDED : டிச 10, 2025 09:03 AM

தேவகோட்டை: சிறுவாச்சியில் ரோடு அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் தேவகோட்டை தாலுகா அலுவலகத்தில் தர்ணா செய்தனர்.
தேவகோட்டை அருகே உள்ள சிறுவாச்சி வழியாக கண்ணங்குடி கப்பலுார் வரை 15 கி.மீ. தார் ரோடு உள்ளது. இந்த ரோடு வழியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் உட்பட பல ஊர்களுக்கு செல்லலாம்.
ரோடு குறுகலான ரோட்டில் ஆபத்தான வளைவு உள்ளதால் தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது. கிராமத்தினர் பல விபத்து நடந்த சிறுவாச்சி ரோட்டை அகலப்படுத்தாமல் புறக்கணிப்பதாக கூறி கண்டித்து இன்று ( டிச.10) தாலுகா அலுவலக முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கிராமத்தினர் தாலுகா அலுவலகம் வந்தனர். மற்ற அதிகாரிகள் வந்தும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் வரவில்லை.போன் செய்தும் சரியான பதில் இல்லை.ஆத்திரமுற்ற கிராமத்தினர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் வந்தார்.
தாசில்தார் சேதுநம்பு தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், எஸ் . ஐ. பாபு, காரைக்குடி நெடுஞ்சாலை செயற்பொறியாளர் பூமிநாதன் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. நீண்ட விவாதத்திற்கு பின் மழை முடிந்தவுடன் தற்போது அனுமதி வந்துள்ள பகுதியில் ரோடு அமைப்பதாகவும் பிற பகுதி ரோட்டை அடுத்த நிதியாண்டில் அமைத்து தருவதாகவும் நெடுஞ்சாலை துறை அதிகாரி எழுத்து மூலம் உறுதி அளித்தார்.

