ADDED : ஜூன் 10, 2025 01:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அருகே சூராணத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் சில நாட்களாக குடிநீர் மற்றும் புழக்கத்திற்கு பயன்படும் தண்ணீர் வரவில்லை.
அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், சாலைக்கிராமம் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வினியோகம்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.