ADDED : மே 14, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள ராஜராஜன் இன்ஜி., கல்லூரியில், அண்ணா பல்கலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ராஜராஜன் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்விக் குழும தலைவர் எஸ். சுப்பையா தலைமையேற்று, மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கினார். டீன் சிவக்குமார் பாராட்டினார்.
மேம்பாட்டு அலுவலர் பழனிவேலு வாழ்த்தினார். துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் வரவேற்றார். பேராசிரியர் ஜனனி நன்றி கூறினார்.