/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலம் நடத்த தடை
/
அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலம் நடத்த தடை
ADDED : அக் 23, 2025 04:29 AM
சிவகங்கை: மாவட்ட அளவில் இன்று (அக்.,23) முதல் அக்., 31 வரை பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, 5 பேர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்து சிவகங்கை கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.
மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு அக்., 24 ல் திருப்புத்துாரில் அரசு சார்பில் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். அக்., 27ல் காளையார்கோவில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் பல்வேறு கட்சியினர், சமூக அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக்., 31 ல் நடக்கும் தேவர் குருபூஜை விழாவிற்கு, சிவகங்கை மாவட்டம் வழியாக ஏராளமானவர்கள் செல்வார்கள். பாதுகாப்பு கருதி இம்மாவட்ட அளவில் அக்., 23 முதல் 31 வரை பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, 5 பேர்களுக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.