ADDED : நவ 19, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. இதில் வீட்டு மனை பட்டா, உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் உபகரணம், ரேஷன் கார்டு கேட்டு 291 பேர் மனு கொடுத்தனர்.
மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும், நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.8 லட்சத்தை கலெக்டர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

