நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் பட்டியலினத்தார் பணிக்குழு சார்பில் தலித் கிறிஸ்தவர்களை பட்டியலினத்தில் சேர்க்க வலியுறுத்தி வியான்னி அருள்பணி மைய இயக்குநர் செபஸ்தி தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.
பணிக்குழு செயலாளர் பாதிரியார் அமலதாஸ் வரவேற்றார். தேவகோட்டை வட்டார அதிபர் அருள் சந்தியாகு தொடங்கி வைத்தார். சமய நல்லிணக்க பிரதிநிதிகள் பிக்கு சாக்கிய முனி, தேவகோட்டை இமாம் அஜிஸ், பாதிரியார்கள் ஆனந்த கல்லுாரி முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமல்ராஜ் (ரோம்) துணை தலைவர் சவரிமுத்து, பேசினர்.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும், இடைக்கால நிவாரணமாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 4.6 சதவீத ஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.