/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.காரைக்குடியில் மக்கள் தொடர்பு முகாம்
/
எஸ்.காரைக்குடியில் மக்கள் தொடர்பு முகாம்
ADDED : பிப் 15, 2024 05:26 AM
இளையான்குடி: எஸ். காரைக்குடியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார்.முகாமில் அரசின் பல்வேறு துறை சார்பில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன்,மானாமதுரை தாசில்தார் ராஜா, துணை தாசில்தார் உமா மீனாட்சி, இளையான்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியாண்டி,எஸ் காரைக்குடி ஊராட்சி தலைவர் குழந்தை பாண்டியன்,துணைத் தலைவர் முத்தையா,பி.டி.ஓ., பாலசுப்பிரமணியன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனிமொழி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

