/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொடர் மழைக்கு பொதுப்பணித்துறை கண்மாய்கள் நிரம்பின: ஒரு போக சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
தொடர் மழைக்கு பொதுப்பணித்துறை கண்மாய்கள் நிரம்பின: ஒரு போக சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தொடர் மழைக்கு பொதுப்பணித்துறை கண்மாய்கள் நிரம்பின: ஒரு போக சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தொடர் மழைக்கு பொதுப்பணித்துறை கண்மாய்கள் நிரம்பின: ஒரு போக சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : டிச 05, 2024 05:51 AM
மாவட்டத்தில் ஆறு, கண்மாய், கிணற்று பாசனம், மானாவாரியாக 1.45 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். நெல் நடவு செய்து முதல் உரம், களையெடுப்பு பணிகளை முடித்து, 35 நாள் பயிராக வளர்த்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் ஒரு போக சாகுபடி எடுக்க ஏதுவாக தொடர் மழை பெய்தது. இதன் மூலம் வைகை ஆற்றில் மழை நீர் செல்கிறது.
அதே போன்று பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள மணிமுத்தாறு, சருகணி ஆறு, உப்பாறு, நாட்டார் ஆறு, நாட்டார்கால், வைகை மற்றும் கோட்டக்கரையாறு கோட்டத்தின் கீழ் 959 கண்மாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கண்மாய்களின் கீழ் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.
இம்மாவட்டத்தில் அக்டோபரில் மேலடுக்கு சுழற்சி மழை, அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை என தொடர்ந்து டிசம்பர் முதல் வாரம் வரை மழை பெய்துள்ளது.
இந்த மழையினால் பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீர், வைகை அணை வழியாக வைகை ஆற்றில் 5 மாவட்ட பாசன வசதிக்கான நீர் தேவைகளையும், கூட்டு குடிநீர் திட்டங்களுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
இந்த மழையினால் மாவட்ட அளவில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 959 கண்மாய்களில், 186 கண்மாய்கள் முற்றிலும் நிரம்பி வழிகின்றன. 76 முதல் 99 சதவீதம் வரை 186 கண்மாய்களில் நீர் தேங்கியுள்ளன.
அதே போன்று 51 முதல் 75 சதவீதம் வரை 274 கண்மாய்களிலும், 26 முதல் 50 சதவீதம் வரை 150 கண்மாய்களிலும், 25 சதவீதத்திற்கும் குறைவாக 48 கண்மாய்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இக்கண்மாய்களில் தேங்கியுள்ள நீரினை பயன்படுத்தி, விவசாயிகள் ஒரு போக நெல் சாகுபடி செய்யலாம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.