/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர் தொட்டிகளுடன் சுத்திகரிப்பு; உபகரணங்கள் அமைக்க வலியுறுத்தல்
/
குடிநீர் தொட்டிகளுடன் சுத்திகரிப்பு; உபகரணங்கள் அமைக்க வலியுறுத்தல்
குடிநீர் தொட்டிகளுடன் சுத்திகரிப்பு; உபகரணங்கள் அமைக்க வலியுறுத்தல்
குடிநீர் தொட்டிகளுடன் சுத்திகரிப்பு; உபகரணங்கள் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 26, 2025 11:51 PM
சிவகங்கை; கிராமங்களில் குடிநீர் தொட்டிகளுடன் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் குளத்து நீர் மற்றும் ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரே குடிநீராக பயன்படுத்துகின்றனர். மாவட்டத்தில் போதிய மழை பெய்தும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் குளங்களில் நீர் வரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதால் ஆழ்குழாய் மூலம் வரும் நீரை குடிக்க வேண்டிய நிலையே பல கிராமத்தினருக்கு உள்ளது.
பள்ளிகள் உள்ள ஊர் மற்றும் அவற்றை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நீரை பள்ளி ஆசிரியர்கள் பரிசோதனை செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படும் நீர் சோதனை அவ்வப்போது நடைபெறுகிறது. இதில் குளோரைடு, புளோரைடு, அமிலத்தன்மை, காரத்தன்மை, இரும்புச்சத்து, நைட்ரைடு, உப்புக்கள், பாஸ்பேட், நுண்கிருமி சோதனை என 16 சோதனைகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு செய்யப்பட்ட பரிசோதனைகளில் ஆழ்குழாய் மூலம் எடுக்கப்படும் நீர் 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் குடிக்கும் நிலையில் இல்லை. இதை நேரடியாக குடித்தால் உடல்நிலை பாதிப்பு ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளில் 85 சதவீத கிராமங்களுக்கு மட்டுமே கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. எஞ்சிய கிராமங்களில் குளத்து நீரையும் ஆழ்குழாய் நீரையும் மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஊராட்சி அளவிலோ அல்லது கிராமங்கள் தோறும் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.