UPDATED : நவ 14, 2026 06:23 PM
ADDED : நவ 14, 2026 06:22 PM

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள பலவான்குடியில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ள நிலையில், போதிய மழை இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
கல்லல் ஒன்றியத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. பலவான்குடி ஊராட்சியில் மானாவரி விவசாயமே அதிகம் நடைபெறுகிறது. இப்பகுதியில், விவசாயிகள் தற்போது நெல் பயிரிட்டுள்ளனர். கண்மாயை நம்பி கடந்த ஆவணியில் நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள் கண்மாயில் தண்ணீர் இல்லாததால்
கவலை அடைந்துள்ளனர். மழை பெய்து கண்மாய் நிரம்பினால் மட்டுமே நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்று தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில்;
பலவான்குடி ஊராட்சியில் பலவான்குடி கண்மாயை நம்பி விவசாயம் நடந்து வருகிறது. கண்மாயில் இருந்த தண்ணீரை நம்பி கடந்த ஆவணி மாதம் நெல் விதைப்பில் ஈடுபட்டோம். கோ 52 நெல் பயிரிட்டுள்ளோம். நெற்பயிர் பரிந்து வரும் நிலையில் கண்மாயில் தண்ணீர் இல்லை. தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து வருகிறது. மழை பெய்தால் மட்டுமே பயிர்கள் பிழைக்கும்.
