/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் கடை விற்பனையாளர் ஸ்டிரைக்: 113 கடைகள் மூடல்
/
ரேஷன் கடை விற்பனையாளர் ஸ்டிரைக்: 113 கடைகள் மூடல்
ADDED : ஏப் 09, 2025 07:57 AM

சிவகங்கை : பொது வினியோகத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும் உட்பட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரேஷன் கடைகளில் தராசுடன், பில்லிங் மிஷினை இணைப்பதால், பதிவு செய்யும் பணி பாதிக்கும். சரியான எடையில் பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும்.
பொது வினியோக திட்டத்திற்கென தனி துறை ஏற்படுத்த வேண்டும். பென்ஷன் வழங்க வேண்டும் உட்பட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு, பாம்கோ நிர்வாகத்தின் கீழ் 662 முழு நேர, 167 பகுதி நேர கடைகள் செயல்படுகின்றன. இதில், 551 விற்பனையாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று 113 விற்பனையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இதனால், அவர்கள் பணி செய்த முழு, பகுதி நேர கடைகள் பூட்டப்பட்டு கிடந்ததால், பொருட்கள் வினியோகம் பாதித்தது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொது செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் மாயாண்டி, செயலாளர் திருஞானம், பொருளாளர் கவுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.