/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகராட்சியில் பயன்படாத வாகனம்ரூ.8 லட்சத்தில் மறு சீரமைப்பு
/
நகராட்சியில் பயன்படாத வாகனம்ரூ.8 லட்சத்தில் மறு சீரமைப்பு
நகராட்சியில் பயன்படாத வாகனம்ரூ.8 லட்சத்தில் மறு சீரமைப்பு
நகராட்சியில் பயன்படாத வாகனம்ரூ.8 லட்சத்தில் மறு சீரமைப்பு
ADDED : அக் 01, 2024 04:55 AM
சிவகங்கை: சிவகங்கையில் 10 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருந்த கனரக வாகனத்தை குடிநீர் விநியோக வாகனமாக சீரமைத்து நகராட்சி நிர்வாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.
சிவகங்கை நகராட்சியில் 10 ஆண்டுகளாக பயன்படாமல் இருந்த குப்பை அள்ளும் லாரி, மினி சரக்கு வாகனம், குப்பை தொட்டி ஏற்றிச்செல்லும் வாகனத்தை ரூ.8 லட்சம் செலவில் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இதில் குப்பை அள்ளும் லாரி குடி நீர் வாகனமாகவும், குப்பை தொட்டி ஏற்றிச்செல்லும் வாகனம் மொபைல் டாய்லட் ஆகவும், மினி சரக்கு வாகனத்தை சிறியரக கழிவுநீர் அப்புறப்படுத்தும் வாகனமாக மறு சீரமைப்பு செய்துள்ளனர். மறு சீரமைக்கப்பட்ட குடிநீர் வாகனத்தை நேற்று நகராட்சி தலைவர் துரைஆனந்த் 26 வார்டில் துவக்கி வைத்தார். கமிஷனர் கிருஷ்ணாராம், மேலாளர் கென்னடி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மற்ற இரண்டு வாகனமும் மறு சீரமைப்பு பணி நடப்பதாகவும் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக மேலாளர் கென்னடி தெரிவித்தார்.