/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அழகப்பா பல்கலையில் மத நல்லிணக்க நாள்
/
அழகப்பா பல்கலையில் மத நல்லிணக்க நாள்
ADDED : ஜூலை 19, 2025 12:17 AM

காரைக்குடி: அழகப்பா பல்கலையில், இளையோர் நலன் மற்றும் அதிகாரப்படுத்துதல் மையம் சார்பில் மரக்கன்று நடுதல், மத நல்லிணக்க நாள் விழா நடந்தது.
பல்கலை துணைவேந்தர் க.ரவி தலைமையேற்றார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன், கார்த்தி எம்.பி., நவாஸ்கனி எம்.பி., சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம், கலெக்டர் பொற்கொடி, மாங்குடி எம்.எல்.ஏ, உள்ளிட்டோர் விழாவை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர்.
அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா அரங்கில் மத நல்லிணக்க நாள் விழா நடந்தது.