/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குட்டையில் குப்பை, கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை
/
குட்டையில் குப்பை, கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை
குட்டையில் குப்பை, கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை
குட்டையில் குப்பை, கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை
ADDED : அக் 29, 2024 05:15 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம்கருப்பூரில் குப்பைக் கொட்டுமிடமாக உள்ள நீர்நிலையை சுகாதாரமான நீர் நிலையாக மாற்ற கிராமத்தினர் கோரியுள்ளனர்.
திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியம் கருப்பூரில் உள்ளது கொள்ளான்குண்டு. முன்பு பாசனக் கால்வாய் மூலம் நிரம்பியது. தற்போது கிராமத்தில் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வரத்துக்கால்வாய் மூலம் இந்த நீர்நிலை நிரம்புகிறது.
முன்னர் இந்த நீர்நிலையில் கிராமத்தினர் குளித்ததுண்டு. காலப்போக்கில்நீர் நிரம்பாமல் கழிவுநீர் குட்டையாக மாறி விட்டது. தற்போது குப்பையும் கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக் கேடான குட்டையாக மாறிவிட்டது.
கிராமத்தினர் இக்குட்டையில் குப்பை கொட்டப்படுவதை தடுக்கவும், கழிவுநீர் கலக்காமல் சுகாதாரமாக மாற்றி, மழை நீர் சேமிப்பு குளமாக மாற்றக் கோரியுள்ளனர்.