/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆய்வக உதவியாளர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்க கோரிக்கை
/
ஆய்வக உதவியாளர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்க கோரிக்கை
ஆய்வக உதவியாளர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்க கோரிக்கை
ஆய்வக உதவியாளர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்க கோரிக்கை
ADDED : மே 20, 2025 12:55 AM
சிவகங்கை: பள்ளிக்கல்வித்துறையில் ஒரே இடத்தில் பணி செய்யும் ஆய்வக உதவியாளர்களை மற்ற அமைச்சுப் பணியாளர்களை பணி மாறுதல் செய்வதுபோல் மாறுதல் செய்து உத்தரவு வழங்கவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில அமைப்பு செயலாளர் கந்தசாமி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், அமைச்சுப் பணியாளர்கள்3 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணி புரிந்தால் அவர்களை வேறு இடத்திற்கு மாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதில் நேர்முக உதவியாளர்கள் முதல் பதிவறை எழுத்தர் வரை அமைச்சுப் பணியின் கீழ் வருகிறார்கள்.
இவர்கள் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்திருந்தால் பணி மாற்றம் செய்ய வேண்டும் என்று தற்போது பள்ளி கல்வி இயக்ககத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வக உதவியாளர்கள் 15 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் சிலர் பாதிப்பு அடைகின்றனர்.
எனவே இவர்களையும் சேர்த்து அமைச்சுப் பணியாளரின் கீழ் வரும் அத்தனை பணியாளர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரியும் பணியாளர்களை மாறுதல்செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.