/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் சரக்கு முனையம் அமைக்க கோரிக்கை
/
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் சரக்கு முனையம் அமைக்க கோரிக்கை
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் சரக்கு முனையம் அமைக்க கோரிக்கை
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் சரக்கு முனையம் அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 13, 2025 06:51 AM
சிவகங்கை: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் சரக்கு முனையம் அமைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ராமேஸ்வரம், கன்னியாகுமரி, எர்ணாகுளத்தில் இருந்து சென்னை, வாரணாசி, வேளாங்கண்ணி போன்ற ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு சிவகங்கை வழியே ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர பிற மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிக்கென விருதுநகர் - காரைக்குடி - திருச்சி, மானாமதுரை - காரைக்குடி, காரைக்குடி - மன்னார்குடிக்கு பாசஞ்சர் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இதன் மூலம் சிவகங்கை மக்கள் பெரிதும் பயன்பெறுகின்றனர். விரைவில் ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் திறக்கப்பட்டதும், கூடுதலாக சென்னை மற்றும் வடமாநிலங்களுக்கு அதிகளவில் ரயில்கள் சிவகங்கை வழியாக இயக்கப்படும்.
சிவகங்கை நகரில் சிட்கோ தொழிற்பேட்டை, முத்துபட்டியில் ஸ்பைசஸ் பூங்கா செயல்படுகின்றன. விரைவில் தமிழக அரசு சுார்பில் அரசனுாரில் சிப்காட் தொழிற்பேட்டையில் ஆட்டோமொபைல் மற்றும் ஜவுளி உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது. இந்த பகுதியில் இன்னும் தொழிற்சாலைகள் வளர்ச்சி பெற, போக்குவரத்து முனையமாக சிவகங்கையை மாற்றப்பட வேண்டும்.
இதற்காக சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் சரக்கு முனையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. சிவகங்கையில் சரக்கு முனையம் அமையும் பட்சத்தில் சிட்கோ, சிப்காட், ஸ்பைசஸ் பூங்கா தொழிற்பேட்டைகளில் இருந்து அதிகளவில் சரக்குகள் ரயில்கள் மூலம் பிற மாநிலங்கள், சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலமும் ரயில்வேக்கு வருவாய் அதிகரிக்கும். எனவே எதிர்கால வளர்ச்சி கருதி சிவகங்கையில் சரக்கு முனையம் ஏற்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.