/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாதாள சாக்கடை பணி நடக்காததால் பரிதவிக்கும் மூன்று வார்டு மக்கள்
/
பாதாள சாக்கடை பணி நடக்காததால் பரிதவிக்கும் மூன்று வார்டு மக்கள்
பாதாள சாக்கடை பணி நடக்காததால் பரிதவிக்கும் மூன்று வார்டு மக்கள்
பாதாள சாக்கடை பணி நடக்காததால் பரிதவிக்கும் மூன்று வார்டு மக்கள்
ADDED : ஜூன் 19, 2025 02:36 AM

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணி நிறைவு பெறாத நிலையில் புதிய சாலை பணியும் துவங்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி நகராட்சியுடன் கோட்டையூர், கண்டனுார் பேரூராட்சி,சங்கராபுரம்,இலுப்பக்குடி,அரியக்குடி,கோவிலுார், மானகிரி ஊராட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.112.5 கோடியில் பாதாளச்சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. நகரின் பல பகுதிகளில் குழாய் பதிக்கும் பணி நடந்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வார்டு 27, 33, 36 உட்பட சில பகுதிகளில் பாதாள சாக்கடை பணியே நடைபெறவில்லை. ஆண்டு கணக்கில் சேதமடைந்து கிடக்கும் சாலையும் சரி செய்யப்படவில்லை. கற்சாலையாகவும் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
33 வது வார்டு மக்கள் கூறுகையில்: சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. முறையான சாக்கடை வசதி இல்லை. பாதாள சாக்கடை பணி முடிந்தால் தான் புதிய சாலை அமைப்போம் என்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.