/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோடு, கால்வாய் வசதியின்றி குடியிருப்பு வாசிகள் அவதி
/
ரோடு, கால்வாய் வசதியின்றி குடியிருப்பு வாசிகள் அவதி
ரோடு, கால்வாய் வசதியின்றி குடியிருப்பு வாசிகள் அவதி
ரோடு, கால்வாய் வசதியின்றி குடியிருப்பு வாசிகள் அவதி
ADDED : மார் 24, 2025 05:43 AM

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட தாசில்தார் நகர், முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்புகளில் ரோடு, கால்வாய் வசதியின்றி குடியிருப்பு வாசிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இங்கு 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. காரைக்குடியில் வளர்ந்து வரும் முக்கிய பகுதியாக உள்ளது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால், அதிகளவில் அடிப்படை வசதிகள் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இங்கு ரோடு, கழிவுநீர் கால்வாய் வசதிகளை கூட செய்துதரவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து முருகானந்தம் கூறியதாவது, இங்கு கால்வாய் வசதியின்றி நடைபாதையில் கழிவுநீர் தேங்குகிறது.
தார் ரோடு வசதியின்றி கற்சாலையாக, குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
காரைக்குடி நகருக்கு மிக அருகில் இருந்தும் எந்தவித அடிப்படை வசதிகளும் இக்குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து சேரவில்லை, என்றார்.