/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்
/
வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்
ADDED : நவ 27, 2024 08:24 AM

சிவகங்கை ; வருவாய்துறையில் காலியாக உள்ள 3,000 அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் உட்பட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு மாநில செயலாளர் தமிழரசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சேகர், செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் ஆனந்த பூபாலன், வளனரசு, அசோக்குமார், புஷ்பவனம் பங்கேற்றனர்.
தேவகோட்டையில் வட்டார தலைவர் மாரியப்பன், காரைக்குடியில் வட்டார செயலாளர் சந்திரன், மானாமதுரையில் வட்டார இணை செயலாளர் முத்துராமலிங்கம், இளையான்குடியில் வட்ட செயலாளர் முத்துவேல், சிங்கம்புணரியில் வட்ட தலைவர் யுவராஜா, திருப்புவனத்தில் வட்ட செயலாளர் விவேக்ராஜா, காளையார்கோவிலில் மாவட்ட தணை தலைவர் பாலமுருகன், திருப்புத்துாரில் மாவட்ட இணை செயலாளர் ராஜா முகமது ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட அளவில் கலெக்டர், கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்களை சேர்ந்த வருவாய்துறை அலுவலர்கள் 400 க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால், மக்களுக்கான அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.