/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டிவைடர் கோடுகள் இல்லாமல் விபத்து அபாயம்
/
டிவைடர் கோடுகள் இல்லாமல் விபத்து அபாயம்
ADDED : மார் 15, 2024 11:50 PM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைக் கோடு வரையாததால் விபத்து அபாயம் தொடர்கிறது.
இத்தாலுகாவை ஒட்டிச் செல்லும் மதுரை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சீரமைப்பணி நடக்கிறது. குறிப்பிட்ட பகுதியை அடைத்து பாதையை மாற்றிவிட்டு சாலை சீரமைக்கப்படுகிறது. ஆனால் பணிகள் முடிந்து வாகனங்கள் அனுமதிக்கப்படும் நிலையில் பல நாட்களுக்கு ரோட்டின் நடுவிலும் பக்கவாட்டிலும் டிவைடர் வெள்ளைக் கோடு வரைய தாமதம் ஆகிறது. இதனால் வாகனங்கள் குறிப்பாக டூவீலர்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே சாலை சீரமைப்பு பணி முடிந்த உடனேயே வெள்ளைக் கோடுகளை வரைய தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இச்சாலை அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் புழுதிபட்டி, நாகமங்கலம், பிரான்பட்டியில் அமைக்கப்பட்ட நிழற்குடைகள் சேதம் அடைந்து பயணிகள் தங்க முடியாத நிலை உள்ளது.

