/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகளால் ரோட்டில் விபத்து அச்சம்
/
காளையார்கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகளால் ரோட்டில் விபத்து அச்சம்
காளையார்கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகளால் ரோட்டில் விபத்து அச்சம்
காளையார்கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகளால் ரோட்டில் விபத்து அச்சம்
ADDED : மே 08, 2025 03:16 AM
சிவகங்கை: காளையார்கோவில் அரசு மருத்துவமனை எதிரே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மக்களின் கோரிக்கையை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காளையார்கோவில் அரசு மருத்துவமனை, அரசு பயணியர் விடுதி முன் வாகனங்கள் செல்வதால், அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. குறிப்பாக சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
ரோட்டிலேயே ஆடு, கோழிகளை அறுத்து விற்பனை செய்வதால், அங்கு சிதறிக்கிடக்கும் கழிவுகளால், துர்நாற்றம் ஏற்பட்டு மருத்துவமனை வருவோருக்கு மேலும் சுகாதாரக்கேடு அதிகரிக்கும் அச்சம் நிலவி வருகிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களும், கடைகள் ஆக்கிரமிப்பில் சிக்கி விபத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஞாயிறன்று ஏராளமான வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி இறைச்சி வாங்க மக்கள் குவிவதால், வாகன விபத்து அதிகரிக்கிறது.
எனவே அரசு மருத்துவமனை, அரசு பயணியர் விடுதி முன் ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்ள இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் தெரிவித்து வருகின்றனர். கலெக்டரும், தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவிடுவதாக தெரிவிக்கிறார். ஆனால், இங்கு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வருவாய், தேசிய நெடுஞ்சாலை, ஊராட்சி நிர்வாகத்தினர் முன்வராததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர்.