ADDED : ஜன 28, 2024 06:08 AM
சாலைக்கிராமம், : சாலைக்கிராமம், ஆர்.எஸ்.,மங்கலம் ரோட்டில் காமராஜர் நகர் பகுதியில் சாலைக்கிராமம் கண்மாய்க்கு செல்லும் கால்வாயை ஆக்கிரமித்து ஒருவர் வீடு கட்டுவதாக கூறி காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் சாலைக்கிராமம் போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அந்த இடத்தை அளவீடு செய்து அவருக்கு சொந்தமான இடத்தில் மட்டும் வீடு கட்ட அனுமதி வழங்கினர். ஆனால் அவர் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறி காமராஜர் நகரை சேர்ந்த மக்கள் நேற்று சாலைக்கிராமம் ஆர்.மங்கலம் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

