ADDED : ஜூன் 15, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை - தெ.புதுக்கோட்டை வழியாக பரமக்குடி செல்லும் ரோட்டில் எஸ்.காரைக்குடி அருகே சேதமான ரோடு குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதால், சீரமைக்கப்பட்டது.
இந்த ரோட்டில் எஸ்.காரைக்குடி அருகே சிறுபாலத்தின் ஓரத்தில் ரோடு மிக சேதமடைந்து காணப்பட்டன. இதனால், இந்த வழியாக செல்லுாம் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சந்திரன் தலைமையில் அதிகாரிகள் அந்த ரோட்டை பார்வையிட்டு செப்பனிட உத்தரவிட்டனர். பின்னர் சேதமான ரோடு சீரமைக்கப்பட்டது.