/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ் ஸ்டாண்ட் வாயிலில் கரடுமுரடு பள்ளங்கள்
/
பஸ் ஸ்டாண்ட் வாயிலில் கரடுமுரடு பள்ளங்கள்
ADDED : செப் 28, 2024 05:59 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்ட் முன் பள்ளங்களை சரி செய்ய அதிகாரிகளுக்குள் போட்டி நிலவுவதால் பயணிகள் தவிக்கின்றனர்.
இப்பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் முன் செல்லும் காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சில மீட்டர் தூரத்திற்கு பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இச்சாலையில் காவிரி குழாய் பதிக்கப்பட்ட போது கற்கள் தோண்டப்பட்டு மீண்டும் மண்ணால் மூடப்பட்டது. இதனால் ஆங்காங்கே சாலை மேடு பள்ளமாக உள்ளது.
குறிப்பாக பேருந்துகள் உள்ளே நுழையும் இடத்தில் சாலை கரடு முரடாக உள்ளது.
இதனால் உள்ளே நுழையும் போது பஸ்கள் குலுங்குவதால், இறங்குவதற்காக படியில் நிற்பவர்கள் தவறி கீழே விழும் அவலம் நீடிக்கிறது. நடந்து செல்பவர்களும் சில நேரங்களில் கால்தவறி விழுகின்றனர். பள்ளங்களை சீரமைக்க பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இடையே யார் சரி செய்வது என்ற போட்டி நிலவுவதால் அப்படியே விடப்பட்டுள்ளது. எனவே பள்ளங்களை விரைந்து சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.